குரங்கணி வனப்பகுதியில் 8 மாதங்களுக்குப் பிறகு, பல்வேறு விதிமுறைகளுடன் மலையேற்றம் செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி, உரிய அனுமதியின்றி மலையேற்றம் சென்ற 23 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு மலையேற்றம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, முறையான பயிற்சி பெற்றவர்களுடன் மலையேற்றம் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு குரங்கணி மலையேற்றம் செல்ல இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post