சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர, மற்ற மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் கொரோனா பரவல் காரணமாக மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று முதல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது. அதன்படி, மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படவுள்ளன. நாளொன்றுக்கு ஒரு கடைக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன்களின் அடிப்படையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மதுபான கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மால்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் இயங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post