ஜம்மு-காஷ்மீர் குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புல்வாமா தாக்குதலையடுத்து, தொடர்ந்து பாதுகாப்பு படை, தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்துவருகிறது. இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இந்திய விமானப்படை நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில், தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படையை சேர்ந்த வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துசென்றது. இன்று அபிநந்தன் விடுதலையாகவுள்ள நிலையில், அதிகாலை மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே கடும் துப்பக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், 3 தீவிரவாதிகள் பிடிப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிடிபட்ட தீவிரவாதிகள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post