தொழிலாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டிற்கான சந்தாவை மத்திய அரசு குறைத்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊழியர்கள் காப்பீடு சட்டம் 1948ன் கீழ் மருத்துவம், உடல் பாகங்கள் இழப்பு,இறுதிச் சடங்கு செலவுகள், வேலை இழப்பு உள்ளிட்டவற்றுக்காக தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு செலுத்த வேண்டிய சந்தாவிற்காக, ஊழியர்களிடமிருந்து 1.75 சதவீதமும், ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து 4.75 சதவீதமும் பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஊழியர்கள் கட்ட வேண்டிய சந்தா தொகையை 1.75 சதவீதத்திலிருந்து 0.75 சதவீதமாகவும், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை 4.75 சதவீதத்தில் இருந்து, 3.25 சதவீதமாகவும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஊழியர்களும், நிறுவனமும் கட்ட வேண்டிய சந்தா தொகை குறைந்துள்ளது, அதே சமயம் ஊழியர்களுக்கான பலன்கள் குறையவில்லை. இதனால், கோடிக்கணக்கான ஊழியர்களும், ஆயிரக்கணக்கான நிறுவனங்களும் பலன் அடைவர்.
Discussion about this post