மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கான தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தலாம்.
தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும்.
பெரு நிறுவனங்கள் நேரடியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தக்கூடாது. காணொலி காட்சி மூலம் நடத்தலாம்.
திருமண மண்டபங்களில் முன்பே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும். புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். இங்கெல்லாம் சுகாதாரமான முறையில் கைகழுவுவதற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் அரசு அனுமதிக்கும்வரை ஒத்திவைக்க வேண்டும்
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
பேருந்துகள், ரெயில்கள், விமானங்களில் பொதுமக்கள் தேவையின்றி பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அனைத்து வணிக வளாகங்களிலும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு மீட்டர் இடைவெளியில் வரும் வகையில் ஏற்பாடு செய்வது நல்லது.
வணிகர் சங்கத்தினர் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சந்தைகளில்
மக்கள் அருகருகே நெருக்கமாக இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வை மருத்துவர்கள் ஏற்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்,சிறுவர்களிடம் எப்படி பழக வேண்டும்? – என்பதையும் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் டாக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பொதுமக்கள் சந்தித்துக் கொள்ளும்போது கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும். பாசத்தால் கையைப் பிடிப்பதையும், கட்டிப்பிடிப்பதையும் கூடத் தவிர்க்க வேண்டும்.
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போதும் கவனமாக இருக்கவும். எங்கிருந்து, என்ன பொருட்களை வாங்குகிறோம்? என்பதில் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையற்ற தகவல்களை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பாமல் அமைதி காப்பது மக்களின் கடமை.
Discussion about this post