இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு கூடுதல் நிவாரண நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து எவ்வளவு நிதி உதவி அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசித்தனர்.
இதில் திட்லி புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒடிசா, திரிபுராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி ஒடிசாவுக்கு ஆயிரத்து 23 கோடியும், திரிபுராவுக்கு 268 கோடியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. அதேசமயம் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
Discussion about this post