விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும், அதிமுக தொண்டருமான வீர. சுப்பிரமணியன், எம்.ஜி.ஆருக்காக இரவு 11 மணி வரை காத்திருந்து, திருமணம் செய்துக் கொண்டவர்.
தனது திருமணத்தின் அழைப்பிதழை எம்.ஜி.ஆருக்கு கொடுத்துவிட்டு, திருமணத்தின் போது அவருக்காக சுப்பிரமணியன் காத்திருந்துள்ளார். ஆனால் தேர்தல் பிரசார பணிச்சுமை காரணமாக எம்.ஜி.ஆரால் இரவு 11 மணிக்கே, திருமணத்தில் பங்கேற்க முடிந்தது. இருப்பினும், எம்.ஜி.ஆருக்காக காத்திருந்த சுப்பிரமணியன், அவரது வருகைக்கு பிறகே, இரவு 11 மணிக்கு மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார்.
Discussion about this post