ஆந்திராவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், திண்டுக்கல்லில் செவ்வாழை பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல்லுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் பல வகையான வாழைப்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. 1 கிலோ 50 ரூபாய்க்கும், ஒரு பழம் 6 முதல் 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட செவ்வாழைப்பழத்தின் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. வரத்து அதிகரித்து விலை குறைந்து இருப்பதால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post