பாமக நிர்வாகி இராமலிங்கம் கொலையில் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் திருச்சி அலுவலகத்தில் என் ஐ ஏ அமைப்பினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அலுவலகத்தை சுற்றி ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் திருச்சி மாவட்ட செயலாளர் முகம்மது சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இராமலிங்கத்தை கொலை செய்வதற்காக, கொலையாளிகள் பயன்படுத்திய காரானது திருச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post