அதிமுகவிற்குள் பிரச்னைகளை உருவாக்க டி.டி.வி. தினகரன் முயற்சி செய்யத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே திமுக அவருக்கு உதவி வருகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் கூட தினகரனும் ஸ்டாலினும் இணைந்தே அதிமுகவுக்கு எதிராக வழக்கை நடத்தினர்.
பின்னர் இப்போது அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முயன்ற போது, திமுக சபாநாயகருக்கே எதிராக செயல்பட்டு அமமுகவுக்கு உதவியதும் நாடறிந்ததே.
இப்படியாக திமுகவும் அமமுகவும் இணைந்து கூட்டு சதியில் ஈடுபடும் போதெல்லாம் அதிமுக தலைவர்கள் அதனைச் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். அப்போதெல்லாம் அந்தக் குற்றச்சாட்டுகளை அமமுக மறுத்து வந்துள்ளது.
இந்த நிலையில் திமுகவுடனான தங்கள் உறவை ஒப்புக் கொள்ளும் விதமாக அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தன்னை அறியாமலேயே ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்து உள்ளார்.
இதில் பேரவை கூடும் போது அதிமுகவின் ஆட்சிக்கு எதிராக திமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படும் – எனத் தங்கள் எதிர்காலத் திட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் பெயரைப் பயன்படுத்தி கட்சி நடத்தும் தினகரனும் அவரது ஆதரவாளர்களும், அம்மா அவர்களின் அரசியல் எதிரியான திமுகவுடன் கைகோர்த்து இருப்பது இப்போது பட்டவர்த்தனமாகி உள்ளது.
இதனை மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் உண்மை விசுவாசிகள் ஏற்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள் என்பதும், அவர்கள் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் இந்தத் திருட்டுக் கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதும் – அரசியல் ஆர்வலர்களின் கணிப்பாக உள்ளது.
Discussion about this post