இந்தியாவுக்குள் ஊடுருவ நேபாளம், பூடான் எல்லைகளைப் பயன்படுத்த சில தீயசக்திகள் முயற்சித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
துணை ராணுவப் படைகளில் ஒன்றான எஸ்எஸ்பி நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை என்றும். அவர்கள் நேபாளம் மற்றும் பூடான் எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழையவும் முயற்சித்து வருவதாக கூறினார். நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருப்பதால் தான் 130 கோடி மக்களும் நிம்மதியாக உறங்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post