அதிமுக ஆட்சி காலம்தான் போக்குவரத்துத் துறையின் பொற்காலம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 121 கோடியே 92 லட்சம் மதிப்பிலான ஓய்வூதிய பலன்கள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்திய துணை கண்டத்திலேயே தமிழகத்தில்தான் பேருந்து வசதி சிறப்பாக உள்ளது என்றார். இன்னும் ஓராண்டில் 825 மின்சார பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறையில் புகுத்தி புதுமை படைக்க உள்ளதாக அமைச்சர் கூறினார்.
Discussion about this post