உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் , ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி 27 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுத்தி ஆட்டம் பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களில், கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் ஏதும் எடுக்காமல், ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். காயத்துடன் ஆடிகொண்டிருந்த அலெக்ஸ் கேரி 46 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சற்று நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல் 22 ரன்களில், ஆர்ச்சர் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, பேட் கம்மின்ஸை, ரஷித் 6ரன்களில் வெளியேற்றினார். தனி ஆளாக போராடி, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்திய ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட்டை கைப்பற்றிய கிரிஸ் ஓக்ஸ், அடுத்த பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கையும் வெளியேற்றினார். 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் சேர்த்தது.
224 ரன்கள் என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராயும், பேர்ஸ்டோவும் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். பேர்ஸ்டோ 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜேசன் ராய் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜோ ரூட்டும், இயான் மார்கனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 32.1 ஓவரில், 2 விக்கெட்டுக்களை இழந்து 224 ரன்களை எடுத்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Discussion about this post