ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க ஜி-7 நாடுகளின் மாநாடு இன்று கூடுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அங்கு உச்சக்கட்ட பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க ஜி-7 நாடுகளின் மாநாடு இன்று கூடுகிறது.
இணைய வழியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அப்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக திரும்பும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என ஜி-7 நாட்டு தலைவர்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆப்கானில் மனித உரிமை மீறல், மாணவ, மாணவிகளின் கல்வி, பெண்களின் உரிமை மற்றும் பொருளாதாரம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
Discussion about this post