அமெரிக்காவின் கிராண்ட் ரிவர் ஆற்றில் கெண்டகி பெர்க்லி அணை அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிக்க மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி படகில் செல்லும் இருவர் ஆற்றில் உள்ளே இருக்கும் மீன்களை பிடிக்க மின்சாரத்தை பாய்ச்சுகின்றனர். இதனால் உள்ளே இருக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள் ஒரே நேரத்தில் மேலே எழும்புகின்றன. இதனால் மீன்களை எளிதாக பிடிக்க முடிவதாகவும், நேரம் விரயமாவது குறைவதாகவும் கூறப்படுகிறது. இந்த மீன் பிடிக்கும் வினோத முறை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Discussion about this post