சேலம் மாவட்டம் ஆத்தூரில், திமுக சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தின்போது, தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுக நகர செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில், ஆத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தின் வெளியே, சாலையின் நடுவே திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கொடிகள் நடப்பட்டிருந்தது.
தேர்தல் விதிமுறையை மீறிய இந்த செயலால், புகாரின் பேரில் ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா, ஆத்தூர் நகர திமுக செயலாளர் பாலசுப்பிரமணியன் மீது தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான வழக்கினை பதிவு செய்துள்ளார்.
Discussion about this post