உரிய ஆவணமில்லாமல் காரில் எடுத்து செல்லப்பட்ட 18 வாக்கி டாக்கிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் சூலூரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கனியூர் சோதனை சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் காவல் துறையினர் பயன்படுத்தும் 18 வாக்கி டாக்கிகள் 14 சார்ஜர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாக்கு டாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரை ஓட்டிவந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த விவேக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post