தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 223 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 50 கோடியே 70 லட்சம் ரூபாய், 346 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
50 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்த அவர், விவசாயிகள் முடிந்தவரை தங்கள் பணத்தை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் தொடர்பாக 2 ஆயிரத்து 600 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மீது மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post