விரைவில் கொரட்டூர் ஏரி தூர்வாரப்பட்டு மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.
சென்னை கொரட்டுர் மற்றும் அம்பத்தூர் ஏரிகளை அமைச்சர் கருப்பணன் ஆய்வு செய்தார். அப்போது, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கொசஸ்தலை ஆறு வடி நிலை கோட்ட செயற்பொறியாளர் முத்தையா, சுற்றுசூழல் மற்றும் வன நலத்துறை உதவி செயற் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பேசிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் மண் தரம் மற்றும் ரசாயனத்தன்மை குறித்த ஆய்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கருப்பணன், கூடிய விரைவில் ஏரி தூர்வாரப்பட்டு எதிர்வரும் காலங்களில் மழை நீர் சேகரிக்கப்பட்டு மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு சென்னை குடிநீர் வாரியதுடன் இணைக்கப்படும் என்று கூறினார்.
Discussion about this post