திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் கொடிகட்டி பறக்கிறது. திமுக ஒன்றும் சங்கரமடமல்ல என்ற சொல்லாடலை அக்கட்சித் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்துவர். ஆனால் செயலில் அப்படி எதுவும் இருக்காது. தற்போது மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல், திமுகவில் வாரிசுகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. தூத்துக்குடியில் கருணாநிதியின் மகளான கனிமொழி போட்டியிடுகிறார்.
மத்திய சென்னை தொகுதியில் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் போட்டியிடுகிரார். கள்ளக்குறிச்சியில் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி போட்டியிடுகிறார். தென்சென்னை தொகுதியில் திமுக மூத்த தலைவர் தங்கப்பாண்டியனின் மகனும் , தங்கம் தென்னரசின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
சென்னை வடக்கு தொகுதியில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். திமுகவில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பலர் இருந்தும், வாரிசுகளுக்கு மட்டுமே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுவது அக்கட்சித் தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post