வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பிரசாரத்தின்போது பைக் ரேசில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டையில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர், சட்டவிதிகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் ரேசில் ஈடுபட்டனர்.
இதனால், சாலையில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மிகுந்த சத்ததுடன் இருசக்கர வாகனங்களை முருக்கிகொண்டு சாலையில் பயணித்து, அட்டூழியத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post