தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், ஆளுநரை பேசவிடாமல் திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேரவையில் சலசலப்பு நிலவியது.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முன்னதாக தமிழ் தாய் வாழ்த்துடன் பேரவை நிகழ்ச்சி தொடங்கியதையடுத்து, ஆளுநரை பேசவிடாமல் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் சற்றுநேரம் சலசலப்பு நிலவியது.
Discussion about this post