வேலூரில் திமுகவை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நிர்வாகிகளுடன் பரதராமியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் திமுக கிளை செயலாளர் ஹமீன் தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட திமுகவினர், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எப்படியாவது அதிமுக ஆட்சியை கவிழ்த்து விட வேண்டுமென்ற திமுக தலைவர் ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது எனவும், வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post