எத்தியோபியா விமான விபத்து எதிரொலியாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க இந்தியாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன் நாடுகளும் 737 ரக விமானத்தை இயக்க தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் போயிங் 737-ஐ இயக்க தடை விதிக்க டி.ஜி,சி.ஏ எனப்படும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்கம் முடிவு செய்துள்ளது.
Discussion about this post