பிரான்ஸ் உணவகத்தில் ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டு வரப்பட்டதால் கொடூர பசியில் இருந்த வாடிக்கையாளர் ‘வெயிட்டரை’ சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸில், நாயிசி-லீ-கிராண்ட் (Noisy-le-Grand) எனும் இடத்தில் உள்ள ‘பீசா மற்றும் சான்ட்விச்’ கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சான்ட்விச் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை எடுத்த உணவக ஊழியர் உணவை தாமதமாக எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், உணவக ஊழியரை சரமாரியாக திட்டியதோடு, அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது பாதி வழியிலேயே உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய வாடிக்கையாளரை தேடி வருகின்றனர்.
Discussion about this post