திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது என்றும், அங்கு செயல்படுத்தும் நடைமுறைகளை இந்தியாவில் செயல்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும், கொரோனா பரவலை தடுக்க நுணுக்கமான திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள மத்திய அரசை பாராட்டுவதாகவும், அதே நேரத்தில் அதற்கான தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இன்னும் அதிக மருத்துவமனைகள், செயற்கை சுவாச கருவிகள் அவசியம் எனவும் ராகுல்காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post