புதுச்சேரியில் பணத்திற்காக பெற்ற தாயையே மகன் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகூர் அருகே ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைக்காக ராணி வெளிநாட்டுக்கு சென்ற நிலையில் தான் சம்பாதித்த பணத்தை மகன் அய்யனாருக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த வருடம் புதுச்சேரி திரும்பிய ராணி தன்னிடம் இருந்த பணத்தை தனது மகளுக்கு கொடுக்க விரும்பியதாகவும், இதற்கு அய்யனார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறபடுகிறது. இதனால் தாய், மகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் ராணி இறந்து கிடந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராணியின் கழுத்து நெரிக்கப்பட்டதும், தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தியதில் மகன் அய்யனார் தான் ராணியை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலிசார் அய்யனாரை கைது செய்தனர்.
Discussion about this post