இலங்கைக் கடலில் நீரளவியல் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்த இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் ஜமுனா கப்பல் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியது.
கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இலங்கைக்கு சென்ற இக்கப்பல் கொழும்பிலிருந்து காலி என்ற இடம் வரை உள்ள கடற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டது மட்டுமல்லாமல் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது. இந்நிலையில் பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய கப்பலுக்கு இலங்கை கடற்படையின் சார்பில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
Discussion about this post