அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சியினரை முட்டாள்கள் என விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமாவை விட தனது ஆட்சியின் நாடு சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டம் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டோனரல்ட் ட்ரம்ப், தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க நீதி துறையின முன்னாள் சிறப்பு ஆலோசகரான பாப் முல்லரின் குற்றசாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், தனது ஆட்சியில் செய்துவரும் நல்ல திட்டங்களை தடுத்து வருவதாகவும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாத முட்டாள்கள் என்றும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், அகதிகள் குடியேற்றம் தொடர்பாக கவுதிமாலவுடன் தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்னதாக போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் அதிபர், பராக் ஒபாமா மற்றும் முன்னாள் செனட் சபை உறுப்பினரான ஹிலாரி கிளிண்டனிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும்,ஒபாமா ஆட்சியை விடவும் தனது ஆட்சியில் நாடு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Discussion about this post