ஊழல்வாதிகள் ஒன்றிணைந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மமதா நடத்திய தர்ணா போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருவதாக குறிப்பிட்டார். பலரையும் சிபிஐ விசாரித்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரியை விசாரிப்பதை கூட்டாட்சியை குலைப்பது என்றோ, அரசு அமைப்புகளை சீர்குலைக்கும் முயற்சி என்றோ எப்படி கூற முடியும்? என்று ஜெட்லி கேள்வி எழுப்பினார். ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்ற வேண்டும் என்று விரும்பும் ஊழல்வாதிகளே மம்தாவை ஆதரிக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஏன்? என்று அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.
Discussion about this post