மதுரையில் பேட்ட, விஸ்வாசம் வெளியான திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்ததால் மாநகராட்சியின் வருமானம் அதிகரித்துள்ளதாக உயர்நீதிமன்றக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியாகியுள்ள பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், அது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட 3 பேர் கொண்ட குழுவை அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக நடந்த வழக்கில் குழு அமைத்ததால் 3 கோடியே 53 லட்சம் ரூபாய் கேளிக்கை வரி கூடுதலாக கிடைத்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைக்க மனுத்தாக்கல் செய்தால் அது குறித்து விசாரிப்பதாக தயார் என்றும் கூறி, இதுகுறித்தான வழக்கை வரும் 30-ஆம் தேதிக்கு நீதிபதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Discussion about this post