நடிகர் கமல்ஹாசனால் கோவை பள்ளி நிர்வாகிகளுக்கு கடும் சிக்கல் எழுந்துள்ளது. கோவையில் கடந்த 24 ஆம் தேதி தனியார் பள்ளியில் அனுமதியின்றி கமலஹாசன் கலந்து கொண்ட மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினரால் இக்கூட்டம் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. பள்ளியின் மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல், விசாரணை செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் பள்ளி நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Discussion about this post