கோவை கிணத்துக்கடவு அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றனர்.
கிணத்துக்கடவு அடுத்த முள்ளுப்பாடி ரெயில்வே கேட் பகுதியில், 42 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நேற்று 65 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும், 500 டன் எடையும் உள்ள இராட்சத இரும்பு பாலம், முன்பே அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்கள் மீது நிலைநிறுத்தப்பட்டது. தற்போது இரும்பு பாலத்தை நகர்த்த அமைக்கப்பட்ட, தண்டவாளத்தை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் இன்னும் 1 மாத காலத்தில் முடிக்கப்பட்டு, மேம்பாலம் வழியாக போக்குவரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் கோவை – பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post