ரஃபேல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது சதி என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ரஃபேல் போர் விமானம் குறித்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் சதி என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த ரகசிய ஆவணங்கள் கசியவிடப்பட்ட சதியில் ஈடுபட்டவர்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 8 பக்க பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிப்ரவரி 28ம் தேதி முதல் உள் விசாரணை நடைபெற்றுவருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணங்கள் தகவலுரிமைச் சட்டம், 2005-ன் கீழ் வெளிப்படுத்துவதற்கு உரியதல்ல எனவும் உச்ச நீதிமன்றத்தில் அரசு கூறியுள்ளது. முன்னதாக ரஃபேல் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
Discussion about this post