நாளைய தேர்தல் முடிவுகளில், மிசோரத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி சந்திக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே செங்கமாரி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எச்.ராஜா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவேரி ஆற்றில் அணை கட்டுவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு என்று தெரிவித்தார்.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் மூலம் வீடு கட்டித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post