அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் பி.ஹெச்.பாண்டியன். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை 9 மணிக்கு காலமானார்.
இந்நிலையில் பி.ஹெச்.பாண்டியன் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளிட்டுள்ள இரங்கல் செய்தியில், தென் தமிழகத்தின் வலுவான மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பணியாற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளார். பி.ஹெச். பாண்டியனை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்களை அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post