டெல்லியில் தொடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம், வரி விகிதங்களில் மாற்றம் குறித்த அறிவிப்பின்றி நிறைவடைந்தது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் காணொலி காட்சி மூலம் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 33வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டுமானம் துறையில் வரி விகித மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், காணொலி காட்சியாக இல்லாமல் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்ததால், இன்றைய கூட்டத்தில் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது. மீண்டும் வரும் 24ம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post