சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, அரசியல் கட்சியினர் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தினார். குறிப்பாக, சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்போர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், அச்சகத்தின் பெயர் இல்லாமல் பேனர், பிரசுரம் அடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
சென்னையில் 8 ஆயிரம் இடங்களில் உள்ள விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், வாக்காளர்களின் உதவிக்காக 1950 என்ற சேவை மையம் செயல்படும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post