மாநில கட்சிகளின் கூட்டணியால் பாரதிய ஜனதா கட்சிக்கு பாதிப்பு இல்லை என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழில்மயமாக்கம் அவசியம் என்றார்.
ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே கூறியிருப்பதாக சுட்டிக் காட்டிய எச்.ராஜா, வளர்ச்சிக்கு எதிராக அர்பன் நக்சல்கள் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் மாநில கட்சிகள் அமைக்கும் புதிய கூட்டணியால் பா.ஜ.கவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.
Discussion about this post