வாணியம்பாடி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கட்டடங்களை பொதுமக்களே இடித்து போக்குவரத்தை எளிதாக்கினர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாராயணபுரம், ஜவ்வாது ராமசமுத்திரம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.
இதனால் அப்பகுதிவாசிகள் கடும் அவதியடைந்து வந்தனர். இதனை அடுத்து 3 கிராம மக்களும் சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தங்கள் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் பேருந்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கட்டட உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர்களை அகற்றினர்.
Discussion about this post