கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒசூரை அடுத்த போடூர் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்த யானைகள் கோபச்சந்திரம் காவேரி நகர் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டியே சுற்றி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துள்ள யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை விரைவில் வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post