தீபாவளியையொட்டி டெல்லி மக்கள் நேற்று நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததையடுத்து வழக்கத்தை விட காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல இடங்களில் மக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினார். நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனை பொருட்படுத்தாமல் பட்டாசுகள் வெடித்ததால் காற்று மாசு அபாய அளவை எட்டியது.
இரவு 7 மணியளவில் காற்று மாசின் அளவு 281 என்ற அளவில் இருந்து 11 மணியளவில் 302 ஆக அதிகரித்தது. காலையில் இதன் அளவு மிக அபாய அளவான 500ஐ தொட்டது. இதனால் டெல்லி மாநாகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. எதிரே வரும் வாகனம் கூட தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். தலைநகர் டெல்லி, கடுமையான காற்று மாசால் அவதிப்பட்டு வருவதையொட்டி தீபாவளி பண்டிகைக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post