திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து கார்ப் பருவ சாகுபடிக்காகக் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து கார்ப் பருவ சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்றுக் கொடுமுடியாறு அணையில் இருந்து ஆகஸ்டு முப்பதாம் தேதி முதல் நவம்பர் முப்பதாம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் நாங்குநேரி, ராதாபுரம் வட்டங்களில் உள்ள சுமார் 5,781 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் விளைச்சல் பெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post