திருவண்ணாமலையில் சார்பதிவாளர் அலுவலகம், குறுவட்ட அளவையர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் புதிய சார் பதிவாளர் அலுவலகம் 90 லட்சம் மதிப்பிலும், குறுவட்ட அளவையர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு 15 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலும் கட்டப்பட்டது. இந்நிலையில், கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததையடுத்து, அவற்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் சார்பதிவாளர் ரமேஷ், ரிப்பன் வெட்டி விளக்கு ஏற்றி வைத்தார். இந்த புதிய கட்டடங்கள் மூலம், சம்பந்தபட்ட அலுவலகம் செல்ல சிரமம் குறையும் என பொதுமக்கள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்
Discussion about this post