மதுரை மாவட்ட மை இட்டான் பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா மதுரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை மை இட்டான் பட்டி கிராமத்தில் , பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டை சார்பில் அதன் அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் இதனை அமைத்துள்ளார். இந்த மணிமண்டபம் மற்றும் அணையா விளக்கு ஆகியவற்றை பெருந்தலைவர் காமராஜரின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மணிமண்டபத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள், ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்
Discussion about this post