கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஏற்கனவே 2 முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டார். விமான நிலையங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள மழலையர்கள் பள்ளிகள், துவக்கப்பள்ளிகள் ஆகியவைகளுக்கு இன்று முதல் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
Discussion about this post