முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சூலூர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் 18 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேர்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார். வரும் 14 ஆம் தேதி மீண்டும் முதலமைச்சர் சூலூரில் 2வது கட்ட பிரசாரம் செய்கிறார்.
Discussion about this post