சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்று நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 38ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. சிதம்பரம் தெற்குவீதியில் மங்கள இசையுடன் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. அதைத் தொடர்ந்து நாட்டியாலயா மாணவர்களின் பரதம், கூச்சுப்புடி கலை மைய மாணவர்களின் கூச்சுப்புடி நடனம், கதக் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடந்தது. வெளிநாட்டு மாணவர்களின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Discussion about this post