2019ம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுழற்பந்து வீச்சில் பலத்துடன் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரத்யேக விற்பனை பொருட்களை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் சி.எஸ்.கே. வீரர் கேதர் ஜாதவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சி.எஸ்.கே. டி சர்ட், வாட்ச், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் ரசிகர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் சி.எஸ்.கே. நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய ஸ்டீபன் பிளமிங், நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மிகுந்த மனவேதனை அளிக்கப்பதாக கூறினார்.
3 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கே அணி அனைத்து போட்டிகளையும் சொந்த மண்ணில் விளையாடுவதாக குறிப்பிட்ட அவர், சுழற்பந்து வீச்சில் அணி பலமாக இருப்பதாக கூறினார். இதையடுத்து பேசிய கேதர் ஜாதவ், உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவது தனது ஆசை என்றும், காயத்திற்கு பிறகு ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளதால், அணியின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.
Discussion about this post