கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், முன்னாள் மக்களவை துனை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பூச்சொரிதல் விழாவும், சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதன்முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் வழிநெடுக பக்தர்கள் தரிசனத்திற்குப் பின்னர் அமராவதி ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள அகழியில் விடப்பட்டது. இதில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் ஆட்சியர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Discussion about this post